புதினங்களின் சங்கமம்

யாழில் போதைப் பொருள் பாவித்த மூர்க்கம்!! குழாய் மின் குமிழை உடைத்து சாப்பிட்ட ரூபசிங்கம்!! மரத்தில் தொங்கி பலி!!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை மேற்கு சுழிபுரம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தரொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கெலும் சஞ்சீவ ரூபசிங்க என்ற 28 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபர் அநுராதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும்,

அவர் கடந்த ஆண்டு பொன்னாலை – சுழிபுரம் மேற்கில் திருமணம் செய்து அங்கு வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவருக்கு போதைவஸ்து பழக்கம் உள்ள நிலையில் ஒரு தடவை இவரை தடுத்தவேளை குழாய் மின்குமிழை உட்கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டுக்கு அருகேயுள்ள மரம் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் கயிறு அறுந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளாக கூறப்படுகிறது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதோடு,

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.