புதினங்களின் சங்கமம்

யாழ் உரும்பராய் கருணை இல்ல பொறுப்பாளர் பாலியல் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை!!

உரும்பராய் கருணை இல்ல பொறுப்பாளர் அ.ஈஸ்வரநாதன் மீது சுமத்தப்பட்ட பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து ஈஸ்வரநாதன் விடுவிக்கப்பட்டுள்ளார். உரும்பராய் கருணை இல்ல பொறுப்பாளர் அ.ஈஸ்வரநாதன் மீது இல்லத்தில் தங்கியிருந்த சிறுமி ஒருவர் மீது இல்ல பொறுப்பாளர் ஈஸ்வரநாதன் பாலியல் குற்றம் புரிந்ததாக 2012ம் ஆண்டு சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார்இல்ல பொறுப்பாளர் ஈஸ்வரநாதனை கைது செய்து வழக்கு தாக்கல் செய்திருந்தனர். பின்னர் நீதிமன்றம் சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்திருந்தது. யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்று வந்தன. வழக்கின் தீர்ப்பு 11.12.2020 அன்று வழங்கப்பட்டுள்ளதுமேற்படி . வழக்கிலிருந்து ஈஸ்வரநாதன் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கரினால் 11.12.2020 தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.