புதினங்களின் சங்கமம்

பருத்தித்துறையில் பொலிஸ் தடுப்பில் இருந்தவன் மீது கொடூரத் தாக்குதல் மேற்கொண்ட இரு பொலிசார் இடைநிறுத்தம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில், தடுத்து வைத்து சந்தேக நபர் ஒருவரை மூர்க்க தனமாக தாக்கிய குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் தடுத்து வைத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த இளைஞன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று இருந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , இளைஞனை தாக்கிய குற்றச்சாட்டில் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , இருவரையும் தலா 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் திணைக்கள ரீதியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் , காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் , இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் விசாரணைகள் முடிவடையும் வரையில் பணி இடை நீக்கம் செய்துள்ளார்.