புதினங்களின் சங்கமம்

“அம்மா, நான் மீன் கொண்டு வருகிறேன்” என கூறிச்சென்ற மாணவனுக்கு ஏற்பட்ட துயரம்

அவிசாவளை, நாச்சிமலை நீரோடையின் கொனவல பகுதியில் நீரில் மூழ்கி 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (28) மாலை உயிரிழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் உயிரிழந்தவர் கஹதுடுவ, பொல்கஸ்ஹோவிட்ட பலகம பிரதேசத்தை சேர்ந்த, ஹொரண வித்யாரத்ன வித்தியாலயத்தில் 12 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவன் பாடசாலையின் வலைப்பந்தாட்ட அணி வீரர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.நேற்று மதியம் நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்த நிலையில், ‘அம்மா, நான் மீன் கொண்டு வருகிறேன்’ என்று கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றதாக தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்

10 பேர் கொண்ட குழு ஒன்று கெப் வண்டியில் குளிப்பதற்குச் சென்றதாகவும், உயிரிழந்த பாடசாலை மாணவனும் மற்றுமொருவரும் திடீரென நீரில் குதித்து இருவரும் நீரில் மூழ்கி காணாமல் போனதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அப்போது, ​​அங்கிருந்தவர்கள் உதவி கோரி கூச்சலிட்டதால், கிராம மக்கள் வந்து நீரில் குதித்து, ஒருவரை உடனடியாக கரைக்கு கொண்டு வந்த நிலையில், மற்றைய மாணவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.