புதினங்களின் சங்கமம்

புத்தரின் மறு அவதாரம் என கூறி குழந்தைகளுடன் உறவு வைத்த சாமியாருக்கு 14 ஆண்டு சிறை!!

நேபாளத்தில் உள்ள அடர்த்தியான காடுகளில் உள்ள ஒரு மரத்தின் கீழ் 2005 ஆம் ஆண்டு ராம் பகதூர் பாம்ஜான் என்ற சிறுவன் 10 மாதங்கள் தவம் இருந்தான் என்றும் அந்த சிறுவன் உணவு, தண்ணீர், உறக்கம் என எதுவும் இல்லாமல் இருந்தான் என்று ஆயிரக்கணக்கான மக்கள் நம்புகின்றனர்.

இதன் காரணமாக அந்த சிறுவனை புத்தரின் மறு அவதாரம் என்று பெரும்பாலான மக்கள் நம்ம ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் 33 வயதாகும் ராம் பகதூர் பாம்ஜான் மீது குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக பொக்சோ வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று நேபாள நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது.

ஜூலை 1 ஆம் திகதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த குற்றத்திற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x