புதினங்களின் சங்கமம்

திருகோணமலையில் பெண் எழுத்தாளரை கட்டிப்பிடித்த மனேஜருக்கு 7 வருட கடூழிய சிறை!!

கடந்த 2011ஆம் ஆண்டு தனக்கு கீழ் பணிபுரிந்த பெண் எழுத்தர் ஒருவரை கட்டித்தழுவி முத்தமிட்ட குற்றத்திற்காக நிறுவனத்தின் மனித வள மேலாளருக்கு ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை (24) தீர்ப்பளித்தது.

பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் அவருக்கு மூன்று பிரிவுகளில் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.750,000 இழப்பீடு மற்றும் ரூ.75,000 அபராதம் அரசுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.

2015 ஆம் ஆண்டு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி, சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக வழங்கி, குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்ததையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

நீதியரசர்களான சம்பத் பி.அபயகோன் மற்றும் பி.குமாரரத்தினம் ஆகியோர் இந்த தண்டனையை வழங்கியுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x