புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டன் கள்ளச்சாமி சரவணபாவாவிடம் ஆண்மீக அருள் பெற பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பொலிசாரிம் முறையிட்டு கொடுத்த பணத்தை மீளப் பெறலாம்!!

லண்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சரவணபாவா என்று அழைக்கப்படும் போலிச்சாமியாரிடம் அவரது ஆண்மீக செயற்பாடுகளுக்கும் அவரது தொண்டு நிறுவனத்திற்கும் என பல்வேறு வழிகளில் அவருக்கு பணம் கொடுத்த ஈழத்தமிழர்கள் தாம் கொடுத்த பணத்தினை மீளப் பெறுவதற்காக தாம் வதியும் பகுதிகளில் உள்ள பொலிசாரிடம் முறைப்பாடுகளைக் கொடுத்து வருவதாகத் தெரியவருகின்றது. ஆகவே இன்னும் குறித்த சாமியாருக்கு பணத்தைக் கொடுத்த ஏமாந்து பொலிசாரிடம் முறையிடாமல் உள்ள புலம்பெயர் தமிழர்கள் யாராவது இருந்தால் சாமியாருக்கு தாம் கொடுத்த பணத்திற்கான ஆதாரங்களை பற்றுச்சீட்டுக்களாகவோ அல்லது வங்கி நடவடிக்கைகளின் ஆதாரங்களாகவோ பொலிசாரிடம் கொடுத்து தமது தகவல்கள் வெளியே வராதவாறு நடவடிக்கை எடுக்கும்படி பொலிசாரை கேட்டுக் கொண்டால் பொலிசார் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து போலிச் சாமியாரிம் கொடுக்கப்பட்ட பணத்தினை மீளப்பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகளவில் காணப்படுவதாக சாமியாரிடம் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டு பொலிசாரிடம் முறையிட்ட சில முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சரவணபாவா சாமியாரிடம் மிகக் குறைந்தளவான பணத்தைக் கொடுத்தவர்களும் அதற்கான ஆதாரங்களை வைத்திருந்தாலோ அல்லது ஆதாரங்கள் இல்லாவிட்டாலோ தயவு செய்து அவனுக்கு எதிரான முறைப்பாட்டை கொடுக்குமாறு குறித்த போலிச்சாமியாரால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள். சில ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கிலும் பல்லாயிரக்கணக்கிலும் குறித்த சாமியாரின் ஆண்மீக நடவக்கைக்காக பணம் கொடுத்துள்ளார்கள் எனவும் அவர்களும் இது தொடர்பாக பொலிசாரிம் முறையிட்டுள்ளார்கள் எனவும் தெரியவருகின்றது.

ஓட்டிசம் நோயினால் பாதிப்புற்ற தனது மகளின் நோயை ஆண்மீக வழியில் குணப்படுத்துவதாக் கூறி சரவணபாவா சாமி ஒரு ஈழத்தமிழ்க் குடும்பத்திடம் 30 ஆயிரம் பவுண்ஸ்களுக்கு மேல் வாங்கி ஏமாற்றியுள்ள தகவலும் வெளிவந்துள்ளது.

“ஈழத் தமிழர்கள் அரசியலில்தான் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள் என்றால், தாம் கடவுள் என்று நம்பியவரும் தங்களை ஏமாற்றிவிட்டார்.” என்று கண்கலங்கியபடி சரவணபாவா சுவாமிகளின் முன்னாள் பக்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆகவே குறித்த போலிச்சாமியிடம் உங்களால் கொடுக்கப்பட்ட பணத்தை, பொலிசாரிடம் முறையிட்டு வாங்கிக் கொள்ளலாம் என சாமியால் பாதிக்கப்பட்டு பொலிசாரிடம் முறையிட்ட ஈழத்தமிழர் தெரிவித்துள்ளார்.