புதினங்களின் சங்கமம்

துபாயிலிருந்து வந்த தற்பரன் பரிதாபகரமாகப் பலியானது ஏன்? நடுத்தெருவில் நிறுத்தப்பட்ட சுகந்தினி!!

பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலையை சேர்ந்த தவராசா தற்பரன் (41)என்பவர் கடந்த 19/06 அன்று துபாயிலிருந்து விடுமுறையில் வீடுவந்துள்ளார்.

நேற்றைய முன்தினமான (16/07) செவ்வாயன்று தனது பல்ஷர் மோட்டார் சைக்கிளில் ஆயித்தியமலை, ஆறாம் கட்டை வயலுக்கு சென்று மாலை 05.00 மணியளவில் வீடு செல்ல வெளியாகிய நிலையில்,

ஆயித்தியமலை, வவுணதீவு வீதியால் பயணித்துக்கொண்டிருக்கும் போது, முன்னாள் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்தை முந்திச்செல்ல முற்பட்ட அதே கணம், உழவு இயந்திரமானது இவர் பயணித்த பக்கமாக சடுதியாக திரும்பியதால் அதில் மோதுண்டு பாதையோரமாகவுள்ள கட்டு ஒன்றுடன் பலமாக நெஞ்சுப்பபகுதி தாக்குண்டதால் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார்.

நேற்று (17/07) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடாத்தப்பட்டு, அவரது மனைவியான பாலசுந்தரம் சுகந்தினி என்பவரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

இன்னும் ஐந்து நாட்களில் மீண்டும் துபாய் செல்லவிருந்த #தற்பரனைஇறைவன் அழைத்துக்கொண்டான்.

ஆயித்தியமலை பொலிசார் மேலதிக விசாரனைகளை தொடர்கின்றனர்.