முல்லைத்தீவு கல்விவலயக் கணக்காளர் திவ்யரூபனின் திருவிளையாடல்!! அரச காசில் வட்டித் தொழில்!!
பல மோசடிகளுடன் தொடர்புபட்டு விசாரனைக்கு ஏதுவாக மாற்றலாகி முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் கணக்காளர் திவ்யரூபன் பல நிதி மோசடிகளை குறித்த கல்விவலையப் பணிப்பாளருடன் இணைந்து செய்துள்ளதாக தெரியவருகின்றது. ரூ.485 740.57 பெறுமதியான நிதி, முல்லைத்தீவு சம்பத்நுவர பாடசாலைக்கு கடந்த 2023 ஜப்பசி மாகாண கல்வி பணிப்பாளரால் ஒதுக்கப்பட்ட போதிலும் முல்லைத்தீவு வலய கல்வி பணிப்பாளர் அந்நிதியை பாடசாலைக்கு விடுவித்து வழங்கவில்லை. அத்துடன் திவ்யரூபனும் வலயக்கல்விப் பணிப்பாளரும் அரச பணத்தை ஊழியர்களுக்கு வட்டிக்கு கொடுப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.


