புதினங்களின் சங்கமம்

யாழில் இறப்பர் முத்திரையை பயன்படுத்தி 17 லட்சம் சுருட்டிய ஓய்வு பெற்ற விதானை தங்கத்துரை!!

யாழ்ப்பாணத்தில் கரவெட்டியில் அமைந்து இருக்கும் யார்க்கரு வரசித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற நிதி மோசடி தொடர்பானது…

ஆலயத்தின் தலைவரான நடராஜா தங்கத்துரை (ஓய்வு பெற்ற கிராம அலுவரும் முழுத்தீவுக்குமான சமாதான நீதவான் ) நிலையான வைப்பில் இருந்த பெருந்தொகையான நிதியை களவாடியுள்ளார்.

2023 ஐப்பசி மாதமளவில் 10 இலட்சம் ,2024 தை மாதமளவில் 7 இலட்சம்
இதற்காக போலியாக கூட்டறிக்கை தயாரித்தும் கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையையும் போலியாக தானகவே செய்து. நெல்லியடி கொமர்ஷல் வங்கியிலிருந்த பணத்தை களவாடியள்ளார்.

இதேவளை இவர்களின் மோசடி அம்பலம் ஆகியதும் உபதலைவர் ,பொருளாளர் தாமகே முன்வந்து பணத்தை வட்டியும் முதலுமாகக் செலுத்தியுள்ளனர் .

இம்மோசடிதொடர்பாக நிர்வாகம் எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது இருப்பது மிகவும் மனவேதனை அளிக்கும் நிலையில் அரசமுத்திரையை போலியாக தயாரித்தமைக்கு கரவெட்டி உத்தியோகத்தர் பிரதேசசெயலகம் நடவடிக்கைகள் எடுக்குமா ?

குறித்த விடயம தொடர்பில் கரவெட்டி பிரதேச செயலாளரை தொடர்புகொண்டு கேட்டபோது போலி ரபர் முத்திரை பயன்படுத்த பணம் எடுக்கப்பட்டமை உண்மை எனவும் அது தொடர்பில் மல்லாகப் பொலிஸ் நிலையததில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்