தற்போதய ஜனாதிபதி கோத்தபாயா மற்றும் முன்னாள் யாழ் மாவட்ட ராணுவத்தளபதி ஹத்துருசிங்க ஆகியோர் தனது நெருங்கிய நண்பர்கள் என கூறி வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து யாழ் மற்றும் வன்னி யுவதிகளை பாலியல் செயற்பாட்டுக்கு மாற்றும் நடவடிக்கையில் இராமச்சந்திரன் என்ற ஒரு காமுகன் ஈடுபட்டு வருவதாக அறிய முடிகின்றது. இலவசமாக சிங்களம் கற்பிக்கின்றேன் என கூறி இளைஞர் யுவதிகளை தன்னிடம் வரவழைத்து தனக்கு பிடித்த யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வாங்கித்தாறேன் எனக் கூறி கொழும்பு கொண்டு சென்று தனதும் தனக்கு நெருக்கமானவர்களுக்கு குறித்த யுவதிகளை அச்சுறுத்தி அவர்கள் மூலம் பாலியல் இச்சைகளை தீர்த்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவனது மனைவி பிள்ளைகள் ஜேர்மனியில் உள்ளதாகவும் கொழும்பு வெள்ளவத்தையில் வீடு வாடகைக்கு எடுத்தே இவன் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.







