யாழில் காணாமல் போன சிறுவன் பரந்தனில் வைத்து கண்டு பிடிப்பு!!
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் 26.04.2024 காணாமல் போன சிறுவன் நேற்று 27.04.2024 மதியம் பரந்தனில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
வீட்டை விட்டு கடந்த 26.04.2024 வெளியில் புறப்பட்ட சிறுவன் இரவாகியும் வீட்டுக்கு வராததால் பெற்றோர் அச்சமடைந்து அயல் கிராமங்களில் தேட தொடங்கினர்.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காணாமல் போன சிறுவனை பெற்றோர் உறவினர்கள் மற்றும் அயலவர்களின் உதவியுடன் தேடி வந்தனர்.
இந்நிலையில் காணாமல் போன சிறுவன் நேற்று மதியம் பரந்தன் பகுதியில் வைத்து உறவினர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்