யாழ் பிரதம தபாலகத்தில் நடக்கும் திருவிளையாடல்கள்!!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்தின் டியூட்டி கிளாக்காக பணிபுரியும் அலுவலர் ஒருவர் தனக்கு கீழ் பணி புரியும் பெண் அலுவலர் ஒருவருக்கு கைக்கடிகாரமும்,கால்சங்கிலியும் வேண்டி கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ் பிரதம தபாலகத்தின் டியூட்டி கிளர்க்காக பணி புரியும் குறித்த அதிகாரி தனக்கு கீழ் பணி புரியும் அழகான வெள்ளை தோல் உடைய பெண் அலுவலர்களை மயக்கும் நோக்கில் அவர்களுக்கு ஒத்திசைவான பணிகளை வழங்கி மேலதிக நேர கொடுப்பனவுகளையும் வழங்கி வருகின்றார்.
அத்துடன் அவர்களை தனது பாலியல் வலைக்குள் வீழ்த்தும் நோக்கில் அவர்களுக்கு அன்பளிப்பு பொருட்களையும் வழங்கி வருகின்றார்.
தனக்கு ஒத்திசையாத அலுவலர்களை பழிவாங்கும் நோக்கில் அவர்களுக்கு கடினமான பணிகளை வழங்கிவருவதுடன் அவருக்கு பிடித்தவர்களுக்கு இலகுவான பணிகளையும் வழங்கி வருகின்றார்.
இன் நிலையில் டியூட்டி கிளாக்குக்கு உடந்தையாக யாழ்ப்பாண பிரதம தபாலகரும் செயற்பட்டு வருவதாக பாதிகப்பட்ட தபாலக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே இவர்கள் இருவரினதும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் தாபலக உயரதிகாரிகளுக்கு எழுத்து மூலமாக தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிகப்பட்ட அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த டியூட்டி கிளாக்குடன் நெருக்கமாகவுள்ள பெண் அலுவலரின் கட்டளைகளையே குறித்த அதிகாரி நடைமுறைப்படுத்தி வருவதுடன் குறித்த பெண் அலுவலருடன் நெருக்கமில்லாத அவருக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்களை குறித்த பெண் அலுவலர் டியூட்டி கிளாக்கின் ஊடாக திட்டுமிட்டு பழிவாங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த டியூட்டி கிளாகின் செயற்பாடுகள் தொடர்பில் அவருடைய மனைவி பலமுறை கண்டித்திருந்தும் அவர் திருந்தவில்லை எனவும் இதனால் அவரின் மனைவியும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே குறித்த டியூட்டி கிளாக் மற்றும் யாழ்ப்பாண பிரதம தபாலதிபர் ஆகியோருக்கு எதிராக வடமாகாண பிரதிதபால்மா அதிபர் மதுமதி வசந்தகுமார் நவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிகப்பட்டஅலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
