யாழில் பொம்பிளைப்பிள்ளையின் சாமானைத் திருடிய இந்தச் செல்லம் பிடிபட்டது எப்படி? வீடியோ
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலர் வீதியில் தரித்து நின்ற உந்துருளியில் பொருட்களை திருடிய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (25) மேற்கொள்ளப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் – சாய்பாவா ஆலயத்திற்கு நேற்று வழிபாட்டிற்கு வந்த யாழ் நல்லூர் பகுதியைச் சேர்ந்த பக்தரான யுவதியின் உந்துருளியிலேயே இந்த சூட்சுமமான திருட்டு பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை சிசிரிவி காணொளியை வைத்து ஆரம்பித்திருந்தனர். இந்த நிலையில் குறித்த நபர் நுணாவில் பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.




