புதினங்களின் சங்கமம்

திருநெல்வேலி லாவீன்ஸ் உயர்தர சைவ உணவகத்தை மடக்கிய இரு பெண்கள்! நடந்தது என்ன?

யாழ் திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள உயர்தர சைவ உணவகமான லாவீன்ஸ் உணவகம் மீது யாழ் மாவட்ட பாவனையாளர் அலுவலகங்கள் அதிகார சபையின் பெண் அதிகாரிகள் மடக்கி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள குறித்த உயர்தர சைவ உணவகம் குடிநீர் போத்தல் ஒன்றை கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்த நிலையில் யாழ் மாவட்ட பாவனையாளர் அலுவலகம் அதிகார சபையின் அதிகாரிகளால் கையும் மெய்யுமாக பிடிபட்டது.

கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்பட்ட உணவகத்துக்கு எதிராக நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

குறித்த உணவக கிளை ஒன்றில் கடந்த வாரம் தோடம்பழ யூஸ் இரண்டு அருந்திய வர்களுக்கு 8 ஆயிரம் ரூபா சிட்டை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

May be an image of 5 people and table