புதினங்களின் சங்கமம்

யாழில் விபத்தில் படுகாயமடைந்திருந்த அரச உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி பலி!!

யாழ் பருத்தித்துறையில் கடந்த மாதம் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வடமராட்சி கல்வி வலய ஊழியர் சிகிச்சை பலனின்றி இன்று (01) அதிகாலை உயிரிழந்தார்.

பருத்தித்துறை புற்றளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய வடமராட்சி கல்வி வலய ஊழியரான யோகலிங்கம் அருள்காந்தன் (வயது-33) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

இவரின் திடீர் இழப்பு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.