யாழ் வடமராட்சியில் நள்ளிரவில் வீடு புகுந்த திருடர்கள் அங்கிருந்தவர்களை மயக்கிய பின்னர் செய்த கேவலமான செயல்!!
யாழ்.வடமராட்சி பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவா்களை மயக்கி பெருமளவு பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளது.
இந்த சம்பவம் வடமராட்சி – துன்னாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டில் இருந்த உறவினர்கள், துன்னாலையில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்த போது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பிகளை அறுத்து வீட்டிலுள் இறங்கிய கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை மயக்கி கொள்ளையடித்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.