மன்னார் வர்த்தகர்களின் திருவிளையாடல்!! புனை பெயர்களில் அத்தியாவசியப் பொருட்கள்!!(Photos)
மன்னாரில் நிலவி வரும் ஊரடங்கு சட்டத்தால் பொருளாதாரத்தில் பாதிப்படைந்து மிகவும் வறுமை கோட்டுக்கு உள்ளாகியுள்ள மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்யும்போது வர்த்தகர்கள் கொள்ளை இலாபத்துக்கு பொருட்களை விற்பனை செய்வதுடன் சிட்டையில் பொருட்களுக்கு பதிலாக அவ் பொருளுக்கு புணைப் பெயர் எழுதியே வழங்குவதாகவும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வருவதாகவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு நுகர்வோர் கொண்டு வந்துள்ளனர்.
இன்று இலங்கை நாட்டை மட்டுமல்ல உலகு நாடுகளை முடக்கி மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயால் ஏழை தொடக்கம் பணக்காரர் வரையும் ஆண்டி தொடக்கம் அரசுஇ அரச பரம்பரை வரையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவற்றின் காரணமாக எம் இலங்கை நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டு மக்கள் இவ் தொற்று நோய்களுக்கு உள்ளாகக் கூடாது என்பதற்காக ஊரடங்குச் சட்டங்கள் அமுல் செய்யப்பட்டு மக்களை பாதுகாக்கும் நோக்குடன் இலங்கை அரசின் நோக்குக்கு அமைய பாதுகாப்பு படையினர்இ அரச அதிகாரிகள்இ சுகாதார பகுதினர் போன்றோர் பலர் தீவிரமாக தன்னுயிரை நோக்காது இரவு பகல் என்று பாராது செயல்பட்டு வருகின்றனர்.
அத்துடன் கடந்த ஒரு மாதகாலமாக ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டு வருவதால் அரசாங்கத்தின் பொருளாதாரம் மட்டுமல்ல அனைத்து மக்களின் பொரளாதாரம் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருவது இன்று கண்கூடு.
அதேநேரத்தில் மன்னார் மாவட்டத்தைப் பொருத்தமட்டில் அன்றாடம் கூலித் தொழிலுக்குச் சென்று அன்றைய உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து வரும் குடும்பங்களே அதிகமாக காணப்படுகின்றன.
நோய் தொற்றா நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்லும் அரசாங்கமானது பொருளாதாரத்தில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வரும் மக்களுக்கு இந்தநேரத்தில் இவர்கள் பட்டினி சாவை நோக்கி செல்லக்கூடாது என்பதையும் கவனத்தில் கொண்டு சில அத்தியாவசிப் பொருட்களுக்கு விலைகளை குறைத்தும் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவாதிருக்கு முகமாக மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் தொடர்பு கொண்டு அதற்கேற்றவாறு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் மாவட்ட மேலதிக செயலாளர்இ பிரதேச செயலாளர்கள் மற்றும் முப்படை அதிகாரிகள் இவர்களுடன் அத்தியாவசிய திணைக்கள அதிகாரிகளின் ஆலோசனைகள் சம்பந்தமான கூட்டங்கள் தேவைக்கேற்றவாறு கூட்டி மக்கள் தேவைகள் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
ஆனால் மன்னார் மாவட்ட முக்கிய வர்த்தகர்களால் மன்னார் பகுதியில் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி தட்டுப்பாட்டை உருவாக்கி வருவதாகவும்இ குறிப்பிடப்பட்ட விலைகளுக்கு மேல் பொருட்களை விற்பனை செய்வதாகவும் பொது மக்களால் தெரிவிக்க்பட்டதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக கடந்த 06.04.2020 அன்று திங்கள் கிழமை இது சம்பந்தமான அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் ஒன்றை மன்னார் மாவட்ட செயலகத்தில் நடாத்தினார்.
இக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாவது இலங்கை முழுவதும் கொரோன அச்சம் காரணமாக ஊரடங்கு சட்டம் அனைத்து மாவட்டங்களிலும் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அரசாங்கத்தால் விலை நிர்ணயிக்கப்பட்ட சில பொருட்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ள சில மொத்த வியாபாரிகளால் இன்னும் கொள்ளை லாபம் வைத்து விற்பனை செய்யப்படுகின்றது எனவும்
அத்துடன் அரசாங்கத்தால் விலை நிர்ணயிக்கப்பட்ட சில பொருட்களை விற்பனை செய்யாமல் வியாபார நிலையங்களின் களஞ்சிய பகுதிகளில் பதுக்கி வைத்துள்ளதாகவும் மக்கள் குற்றம் சுமத்தp வருவதாகவும் தெரிவிக்க்பட்டது.
இதன்போது 65 ரூபா நிர்ணய விலை அமுல்படுத்தப்பட்ட பருப்பை மன்னாரில் உள்ள முன்னிலை வர்த்தக நிலையம் 170 ரூபாய்க்கு விற்பனை செய்வதுடன் சட்ட நடைமுறைகளில் இருந்து தப்புவதற்காக ‘பில்’ அதாவது பற்றுசீட்டுகளில் ‘கட்டை’என்று குறிப்பிட்டு விற்பனை செய்வதாகவும் மக்கள் தெரிவிப்பதாகவும் இவ் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு அதன் பில்லும் எண்பிக்கப்பட்டது.
அத்துடன் 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட சமண் மீன் டின் போன்ற அத்தியாவசிய விலை குறைக்கப்பட பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதாக இக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் திடீர் விலை குறைப்பhனது விற்பனையாளர்களை பாதிப்பு அடைவதாக இருந்தாலும் அரசங்கம் பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் போது மாத்திரம் இவ்வாறான மொத்த வியாபரிகள் உடனடியாக விலைகளை அதிகரித்து லாபம் சம்பாதிக்கின்றனர்
ஆனால் தற்பொழுதுள்ள பரவி வரும் நோயின் அச்சத்தின் காரணமாக மன்னார் மாவட்டம் ஊரடங்கு சட்டம் காரணமாக முடங்கியிருக்கும்போது இவ் வர்தத்கர்களின் செயல்பாடானது இவ் மன்னார் மக்களை பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் இவ்வாறான அவசரனிலையின் போது மாத்திரம் ஏன் விலை குறைப்பதில்லை என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் எனவும் இக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் ஊரடங்கு சட்டம் இருந்தாலும் கிராமபுரங்களிலுள்ள கடைகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இவ் மொத்த வியாபாரிகள் தாங்கள் விற்கும் சில்லறை விலைக்கே சில்லறை கடைகளுக்கு வழங்கி வருவதால் சில்லறை வியாபாரிகள் இவ்வாறான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி விற்பதில் தயக்கம் காட்டி வருவதால் பொருட்களுக்கு கிராமபுற பகுதிகளில் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் தெரிவிக்க்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அதாவது மன்னார் நகரில் 30 நபர்களுக்கும்இ மாந்தை மேற்குப் பிரிவில் 33 நபர்களுக்கும்இ நானாட்டான் பிரிவில் 27 நபர்களுக்கும்இ மடு பிரிவில் 14 நபர்களுக்கும் முசலி பிரிவில் 34 நபர்களுக்கும் ஊரடங்கு சட்டம் இருக்கின்றபோதும் அத்தியாவசிய பொருட்களுக்கு நடமாடும் சேவைகளை நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இப்படியிருந்தும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதும் மக்கள் சாரி சாரியாக ஏன் மன்னார் நகர் நோக்கி வந்து நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை இருக்கின்றது என்றும் இங்கு ஆராயப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் இயங்கி வருகின்ற சதொச மற்றும் கூட்டுறவு சங்கங்கள் திறமையாக இயங்கி செயல்படுமாகில் மக்கள் இவ்வளவு அவதிக்கு உள்ளாக மாட்டார்கள் எனவும் கருத்துக்கள் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் மன்னார் பகுதி சதொச விற்பனை நிலையங்கள் சிறந்த முறையில் இயங்கி வந்தபோதும் தற்பொழுது இவ் விற்பனை நிலையங்களிலும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாலேயே தனியார் விற்பனை நிலையங்கள் தங்கள் கைவரிசைகளை காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் சில வர்த்தக நிலையங்கள் ஊரடங்குச் சட்டம் நீண்ட நாளுக்கு நீடிக்க இருப்பதாக தெரிவித்து தங்கள் வியாபாரங்களை பெருக்கி வருவதாகவும் இதனாலேயும் பணம் படைத்தவர்கள் நீண்ட நாட்களுக்கு தங்களுக்குத் தேவையான பொருட்களை கொள்முதல் செய்து வருவதாகவும் இதனால் குறிப்பிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் நிலவுவதும் ஒரு காரணமாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் 23117 நபர்கள் சமூத்தி பயனாளிகளாக இருக்கின்றார்கள். அரசாங்கத் திட்டத்துக்கமைய இவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இவர்களுக்கு வழங்கப்படும் பணத்தைக் கொண்டே இவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்கின்றனர்.
ஆனால் வியாபாரிகள் கொரோனா வைரஸ் நோயை மையப்படுத்தி கொள்ளை இலாபத்தில் பொருட்களை வியாபாரம் செய்வதால் இந்த நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என தெரியாத நிலையில் வறுமை கோட்டுக்குள் வாழும் மக்கள் பட்டினி சாவை நோக்கி சென்று விடுவார்களோ என்ற நிலையும் இங்கு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆகவே மன்னார் மாவட்டத்தில் முக்கிய கிராமங்கள் தோறும் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி அவ் பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கட்டுப்பாட்டு விலைக்கு விற்க வேண்டும் எனவும் அத்துடன் இங்குள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் பொருட்கள் தட்டுபாடு நிலவாமால் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களும் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும்
இனம் காணப்படும் வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு இவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வாஸ் கூஞ்ஞ)




