யாழில் நிறை வெறியில் தாய்க்கு கொடூரமான செயல் புரிந்த காவாலி மகன்!!
மதுபோதையில் உணவு கேட்டு மகன் தாக்கியதில் படுகாயமடைந்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி கற்குளி பகுதியில் நேற்று இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மதுபோதையில் வீட்டுக்கு நள்ளிரவு வந்த மகன் உணவு தருமாறு தாயாரை கோரியுள்ளார். உணவு இல்லை என தாயார் கூறியதும் இருவருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டது.
இந்த வாய் தர்க்கம் முற்றி மகன் தாய் மீது சரமாரியாக கை மற்றும் கால்களால் தாக்கியுள்ளார்.
மகனின் தாக்குதலினால் காயமடைந்த தாய் அயலவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
குறித்த தாக்குதலை மேற்கொண்டவர் தற்போது தலைமறைவாகி உள்ளார் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.