கிளிநொச்சியில் கடிதம் எழுதிவிட்டு துாக்கில் தொங்கிய இளம் யுவதிகள் இவர்கள்தான்!! Photos)
எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு சிறுமிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். நேற்று (16) பிற்பகல் இரண்டு மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுரேஸ்குமார் தனிகை வயது 17 லோகேஸ்வரன் தமிழினி வயது 17 ஆகிய இரண்டு சிறுமிகளுமே லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டுச் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இறுதியாக நடைப்பெற்ற க.பொ.த சாதாரன தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகள் ஆவா்.





