யாழில் தனிமையில் வசித்து வந்த சரோஜின சடலமாக மீட்பு! கொலை என சந்தேகம்…
குறித்த சம்பவத்தில் 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் .
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது குறித்த மூதாட்டி தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் அவரின் நடமாட்டம் சில நாட்களாக இல்லாமல் இருந்தது.
நோயின் காரணமாக வெளியில் வரவில்லை என அயலவர்கள் யோசித்து வீட்டுக்கு சென்று பார்த்தபோது மூதாட்டி இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
மூதாட்டியிடம் திருடும் நோக்கில் அவரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகங்கள் எழுகின்றது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் கொண்டு வருகின்றனர்.

