யாழ் மாநகரசபை மேயருக்கு ஆப்பு வைத்த மனித உரிமை ஆணைக்குழு!! நடந்தது என்ன?
யாழ். கொழும்புத்துறை நெடுங்குளம் கிராமத்தில் 350 குடும்பங்கள் பயன்படுத்தும் பாதை சம்பந்தமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்தியக் காரியாலயத்தில் மேற்படி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபாலராஜா நிஜேந்தன் என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டுக்கமைய மேற்படி பாதை தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் யாழ்ப்பாணம் நகர அபிவிருத்தி அதிகாரசபையால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை இடைநிறுத்தி வைக்குமாறு மனித உரிமை ஆணைக்குழு தடையுத்தவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பான அறிவுறுத்தல் கடிதம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளரால் யாழ். மாநகர சபை முதல்வர் மற்றும் யாழ்ப்பாணம் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியோருக்கு இன்றைய தினம்(27) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.