யாழில் துரத்தித் துரத்தி மனைவியை அறுத்த கணவன்!! படுகாயமடைந்த நிலையில் மனைவி வைத்தியசாலையில்!! கணவன் தலைமறைவு!!
கணவன்- மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றியமையால் மனைவியை கணவர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பப் பெண்மணி ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை(27) பிற்பகல் யாழ்.குருநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பப் பெண்ணை அயலவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மனைவியைக் கத்தியால் குத்திய கணவர் தலைமைறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் அவரைத் தேடி வருகின்றனர்.
இதேபகுதியைச் சேர்ந்த 40 வயதான குடும்பப் பெண்மணியே கத்திக் குத்தில் படுகாயமடைந்தவராவார். சற்று முன் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.