நீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதியின் மகள் சத்துரிக்காவிற்கு அழைப்பாணை!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.சத்துரிக்கா சிறிசேனவின் கையொப்பம் அடங்கிய ஆவணம் ஒன்று கடன் எடுப்பதற்காக தனியார் வங்கியில் சமர்ப்பிக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த விடயம் தொடர்பில் சத்துரிக்கா சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் நீதிமன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை.இந்நிலையிலேயே, சத்துரிக்கா சிறிசேனவிற்கு நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், அவருக்கு கிடைக்கும் வகையில் நீதிமன்ற அறிவித்தலை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.இதேவேளை, ரேணுகா ரண்வெல ஆராச்சி மற்றும் கோசிக்கா விமுக்தி காரியவசம் ஆகிய இரண்டு பேருக்கு கடன் வழங்குமாறு கோரி தனியார் வங்கியில் இந்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.