முஸ்லிமாக மாறிய தமிழரிடம் மட்டும் பாயும் விசாரணைகள்!
வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையில் வைத்து கைது செய்யப்பட்ட பத்து பேரில் ஒருவாரன கருப்பையா ராஜேந்திரன் எனும் அப்துல்லா தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரை எதிர்வரும் 08 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பியந்த லியனகே நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த நபருக்கு எதிராக தொடர்ந்தும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற் கொண்ட நீதவான் குறித்த நபரை 8 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
சிறிலங்காவில் நடந்த குண்டு தாக்குதல்களில் குறித்த குண்டுகளை வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டதாக குறிப்பிட்டு 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மேலும், கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரிக்கு சொந்தமானதே இந்த செப்பு தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.