யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றினால் 10 பேர் மரணம்!
யாழ்ப்பாணத்தில் இன்று கொரோனாத் தொற்றினால் பத்து பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கைகள் ஊடாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில்,
யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் மாவட்டச் செயலகம் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையில் எண்மர் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
அதன் அடிப்படையில்,
யாழ்ப்பாணத்தில் 02 பேர்,
நல்லூரில் 02 பேர்,
சண்டிலிப்பாயில் ஒருவர்,
உடுவிலில் ஒருவர்,
தெல்லிப்பழையில் ஒருவர்,
கோப்பாயில் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,
உயிரிழந்த பெண் ஒருவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே முன்னதாக இன்று காலை தென்மராட்சியின் மட்டுவில் பகுதியில் உயிரிழந்த 65 வயதுப் பெண்ணுக்கும் அன்டிஜன் பரிசோதனை ஊடாக கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.
இதனால் இன்று யாழ்ப்பாணத்தில் உயிரிழந்ததாக அறிக்கையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாகும்.

