புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாண இளைஞர், யுவதிகள் 1500 பேரை அலரிமாளிகையில் தவிக்க விட்ட ரணில்!!

இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கான நேர்முகத்
தேர்வு பிரதமரின் அலுவலகமான அலரிமாளிகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை
பிற்பகல் 1 மணிக்கு என்று நேர்முகத் தேர்வு கடிதத்தில்
குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கமைய பரீட்சாத்திகள் முற்பகல் 11 மணிக்கே அலரிமாளிகைக்குச்
சென்றிருந்தனர். சுமார் ஆயிரத்து 500 பேர் வரை வீதியில் சுட்டெரிக்கும்
வெயிலில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.

தமக்கு குடிதண்ணீர் உள்ளிட்ட எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை பரீட்சாத்திகள் தெரிவிக்கின்றனர்.
நேர்முகத் தேர்வுக் கடிதத்தில் குறிக்கப்பட்டிருந்த பிற்பகல் ஒரு மணிக்கு
நேர்முகத் தேர்வு ஆரம்பிக்கப்படவில்லை. அதனால் பரீட்சாத்திகள் பெரும்
அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.