புதினங்களின் சங்கமம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கடலில் மூழ்கி பலி – தாய் தீவிர சிகிச்சை

கிரிந்த கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 04பேரில் தந்தை மற்றும் இரண்டு மகள் பலி தாய் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

கிரிந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்ஸமாராம கிரிந்த கடலில் நீராடசென்ற ஒரே குடும்பத்தை சேர்நத நான்கு பேர் கானாமல் போயுள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 23.06.2019 ஞாயிற்றுகிழமை காலை ஏழுமணி அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

இதில் தந்தையும் இரண்டுமகளும் நீரில் முழ்கி பலியாகியுள்ளதோடு தாய் மீட்கபட்டு திஸ்ஸமாராம தெபரவவ வைத்தியசாலையின் திவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கபட்டவர்கள் ஹட்டன் பகுதியை சேர்நதவர்கள் எனவும் உயிர் இழந்தவரின் மனைவி நுவரெலியா சம்பந்த வங்கியில் பணிபுரிந்து வருவதாகவும் கடந்த வெள்ளி கிழமை நுலரெலியா சம்பந்த வங்கியில் பணிபுரியும்
குழுவினரோடு யாழ பகுதிக்கு சுற்றுலா சென்றதாக உறவினர்கள்
தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் பலியானவர் ஹட்டன் சாக்கு விடுதி வீதியை சேர்ந்த42வயதுடை ருவான் விஜேசூரிய என அடையாளம் கானபட்டுள்ளதோடு நிஸாதி வயது 08 ,நான்கரை வயதுடை இரண்டு மகளும் பலியாகியுள்ளதோடு தெபரவவ வைத்தியசாலையின் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்ட தாய் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு ஹேலிப்டர் முலம் கொண்டு
செல்லபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை கிரிந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.