யாழ் வடமராட்சியில் 18 வயது யுவதி நீரில் மூழ்கிப் பலி!!
யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதியில் இன்று பிற்பகல் கடலில் நீராடிவிட்டு மீண்டும் அருகில் இருந்த நீர்த்தேக்கத்தில் நீராடிய 18 வயது யுவதி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியை சேர்ந்த குறித்த சிறுமி கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் நான்கு நண்பர்களுடன் கடற்கரைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த வேளை நீரில் மூழ்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து குறித்த சிறுமியுடன் சென்றவர்கள் கூக்குரலிட்ட நிலையில் அருகிலுள்ள இராணுவத்தினர் அச் சிறுமியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளது.
இச் சம்பவத்தில் அலன்மேரி ஆனந்தராஜா என்னும் 18வயதுடைய எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.


