புதினங்களின் சங்கமம்

இலங்கையில் தொடரும் பஸ் விபத்து… இன்று அதிகாலையும் இருவரது உயிர்களை காவு கொண்ட பஸ் விபத்து! (Photos)

அம்பன்பொல பிரதேசத்தில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற மற்றுமொரு பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
கூரகலவிற்கு யாத்திரைச் சென்று மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த யாத்திரைகள் பயணித்த பேருந்து ஒன்று அம்பன்பொல பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனுடன் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் அம்பன்பொல வைத்தியசாலையிலும், கல்கமுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலாவ பகுதியைச் சேர்ந்த 32 வயது மற்றும் 71 வயதுடைய இருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
May be an image of 3 people and carNo photo description available.