ராங்கிங்!! மாணவிகளுக்கு உறவு காட்சிகள் காட்டிய பேராதனை பல்கலை மருத்துவ பீட மாணவனான மட்டக்களப்பு இளைஞன் தற்கொலை முயற்சி!!
பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் ஒருவர் நேற்று விபரீத முடிவெடுத்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விடுதியில் தங்கியிருந்த வேளை, தற்கொலைக்கு முயற்சித்த போது கீழே விழுந்து காயமடைந்த நிலையில் மாணவர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மட்டக்களப்பைச் சேர்ந்த 25 வயதுடைய மாணவரே இந்த விபரீத முடிவினை மேற்கொண்டுள்ளார்.
குறித்த மாணவன் நேற்றிரவு ஏனைய மாணவர்களுடன் இரவு உணவு உண்பதற்காக வெளியில் செல்லாத நிலையில், நண்பர்கள் அவருக்கு உணவு கொண்டு வந்து அறை கதவினை தட்டி திறக்காத காரணத்தினால் அருகில் உள்ள ஜன்னல்கள் வழியாக அறைக்குள் நுழைந்து தேடியபோது, மாணவன் தரையில் காயமடைந்து கிடந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் புதிய மாணவர்களை இணையத்தில் ஆபாசமான காட்சிகளைக் காட்டி துன்புறுத்திய குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட நான்கு மாணவர்களில் இந்த மாணவரும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
துன்புறுத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக நான்கு மாணவர்களும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில், விசாரணையை எதிர்கொள்ள மூன்று மாணவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளனர்.
இருப்பினும், குறித்த மாணவன் இதுவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு செல்லவில்லை என்றும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

