புதினங்களின் சங்கமம்

யாழ் சிறைச்சாலை கூரையில் ஏறி கொள்ளையன் ஒருவன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளான்!!

இன்று 27.05.2023 15.30 மணி முதல் யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் B2 அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்வரும் கைதி சிறைச்சாலையின் கூரையில் ஏறி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

கஸ் கார்டன் வீதி, வில்பிட்ட அக்குரஸ்ஸ மாத்தறை என்ற இடத்தை சேர்ந்த புஷ்பகுமார. போல் 41 வயது உடையவரே இவ்வாறு கூரையில் ஏறி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

சிறைச்சாலைகள் ஆணையாளரின் உத்தரவுக்கமைய 12.02.2023 அன்று குருவிட்ட சிறைச்சாலையிலிருந்து யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட இவர் பல திருட்டு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்.

யாழ்.சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி அவர் மேற்கண்டவாறு உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.