புதினங்களின் சங்கமம்

புகழ்பெற்ற இலங்கை வைத்தியர் ஒருவருக்கு அவுஸ்திரேலியாவில் நேர்ந்த சங்கடம்!!

பிரிஸ்பேன் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கையின் பிரபல வைத்தியர் தினேஷ் பலிப்பனவுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு விர்ஜின் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கோரியுள்ளது.ஊனமுற்றோர் குறித்து விரிவுரை வழங்குவதற்காக பிரிஸ்பேனில் இருந்து மெல்போர்ன் செல்வதற்காக அவர் நேற்று விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.இதன்போது விர்ஜின் ஏர்லைன்ஸின் தரை செயற்பாடுகளை கையாள்பவரின் அலட்சியத்தால், வைத்தியர் தினேஷ் பலிப்பன தனது சக்கர நாற்காலியில் இருந்து கீழே விழுந்தார்.அவருடன் வந்த இரண்டு உதவியாளர்களின் அறிவுறுத்தல்களை தரை செயல்பாட்டுக் கையாளர் புறக்கணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த சம்பவம் குறித்து விர்ஜின் ஏர்லைன்ஸ் ஏற்கனவே முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று கூறப்படுகிறது.உள்ளக பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த பல ஸ்கேன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாக வைத்தியர் தினேஷ் பலிப்பன தெரிவித்துள்ளார்.