புதினங்களின் சங்கமம்

டிக் டொக் மோகம்!! இலங்கைத் தமிழ் இளைஞர்கள் 3 பேர் வீதி விபத்தில் சிதறிப் பலி!! (புகைப்படங்கள்)

தமிழகத்தில் மூன்று இலங்கை தமிழ் இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்தவர்கள் தயாளன், சார்லஸ் மற்றும் ஜான்.

இவர்கள் மூன்று பேரும் பெத்திக்குப்பத்தில் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் தாங்கள் பைக்கில் செல்வதை வீடியோ எடுத்தபடி செல்லவே, ஒருகட்டத்தில் முன் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றுள்ளனர்.

அப்போது அவர்கள் வாகனம் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் சிதறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் இளைஞர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்து ஏற்படுத்தியதாக லாரி ஓட்டுனர் கைது செய்ய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.