யாழில் மற்றுமொருவர் கொரோனாவால் மரணம்!
கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு நபர் யாழ்ப்பாணத்தில் நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று உயிரிழந்த நிலையில் கடந்த இரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 63 வயதுடைய முத்துக்குமார் ராஜ்குமார் என்று தெரியவந்துள்ளது.
இதனிடையே கடந்த இரவு யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் 324 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 08 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அவர்களில்,
யாழ்.போதனாவில் 04 பேரும்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒவரும்,
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருவரும்,
கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

