புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் ஆபாச வீடியோ பார்த்த மாணவனின் தொலைபேசி அதிபரிடம்!! தற்கொலை நாடகம் ஆடிய மாணவன்!!

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டிக்கான இல்ல அலங்கார செயற்பாட்டினை குறித்த மாணவன் சக மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்டதாகவும், அதற்கான ஒவியம் வரைவதற்காக அன்றையதினம் இரவு பாடசாலைக்கு தொலைபேசியினை கொண்டு சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு தொலைபேசியினை பாடசாலையினுள் குறித்த மாணவன் பாவிப்பதை கண்ட அதிபர் தொலைபேசியினை பறித்ததுடன் மாணவனின் தந்தையை தன்னை வந்து சந்திக்க வேண்டும் என கூறியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

அதன் பின்னர் மாணவனின் தாய் அதிபரிடம் தொலைபேசியில் விடயத்தை கேட்டதுடன் தொலைபேசியை வழங்குமாறும் கோரியுள்ளார். எனினும் அதிபர் தொலைபேசியினை வழங்காததுடன், தந்தையை கட்டாயம் தன்னை சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து தொலைபேசியின் ஊடாக மாணவனின் தந்தை அதிபரை தொடர்பு கொண்டு கதைத்துள்ளார்.

இதன்பின்னர், மாணவனின் தந்தை தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக பூவரசங்குளம் பொலிஸில் அதிபர் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.

இவ் முறைப்பாட்டினை அடுத்து இரு தரப்பினரையும் பொலிஸார் அழைத்து பேசி விசாரணை நடத்தியதாக மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையிலேயே அவமானத்தை தாங்க முடியாமல் குறித்த மாணவன் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும் மாணவனின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

இதே வேளை குறித்த மாணவன் பாடசாலைக்கு கைத் தொலைபேசியைக் கொண்டு வந்து ஆபாச வீடியோக்கள் பார்த்ததாகவும் அதனாலேயே அதிபர் அவனது தொலைபேசியைப் பறித்து வைத்து தந்தையை வரவழைத்ததாகவும் , ஆனால் தாயார் அதிபருடன் கதைத்து சமாளிக்க முயன்றதாகவும் வயசுப் பையன்கள் அப்படித்தான் என அதிபருடன் கதைத்தாகவும் தெரியவருகின்றது. அத்தடன் தந்தையும் பாடசாலைக்கு வந்த மாணவனின் செயற்பாட்டை அறியாது தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாயாரைப் போலவே கதைத்ததால் அதிபர் தொலைபேசியை மாணவனிடம் கையளிக்கவில்லை எனவும் தெரியவருகின்றது. இதனாலேயே பெற்றோர் போலியான முறைப்பாட்டை பொலிசாருக்கு கொடுத்துள்ளதாகவும் பாடசாலை நிர்வாக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.