புதினங்களின் சங்கமம்

யாழில் கனடா செல்வதற்கு பணம் இல்லையாம்! கிரிஸ்டியன் பலி!!

கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத இளைஞன் ஒருவர் இன்றையதினம்(22) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

இதன்போது யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதி பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் கிரிஸ்டியன் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கனடா செல்வதற்கு நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்தார்.

இருப்பினும் நிதி வசதி இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணம் – ஆரியகுளம் பகுதிக்கு அருகில் உள்ள காணியில், மரத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.