புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த ஒரு மாத குழந்தை!!

யாழில் பிறந்து மர்மமான முறையில் உயிரிழந்த ஒரு மாத குழந்தையின் மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பிறந்து 34 நாட்களேயானா பொன்னாலை பகுதியைச் சேர்ந்த விதுஜன் கிஷான் எனும் குழந்தை திங்கட்கிழமை உயிரிழந்துள்ளது.

மூக்கில் இருந்து இரத்தம் வடிந்ததை அவதானித்த பெற்றோர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.

விரைந்து குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

எனினும், குழந்தையின் உயிரிழப்புக்கான காரணங்கள் தெரிய வராததால், குழந்தையின் சடலத்தில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.