Vampan memesபுதினங்களின் சங்கமம்

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை!! சுரேந்திரன் கழுவி ஊற்றப்பட்டார்!! (Photos)

யாழ் நகரப்பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்று புதிதாக பெயின்ட் அடிக்கப்பட்டு அழகாக இருந்துள்ளது. அந்த கடைசுவற்றில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற வேட்பாளர் சுரேந்திரனின் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் கொதிப்புற்ற ஒருவர் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்ததை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

கழுதைக்கு தெரியுமா கற்பூரத்தின் வாசனை மூமென்ட்.?

யாழ் நகரின் மத்தியில் உள்ள கஸ்தூரியார் வீதியில் உள்ள மேற்படி நகைக்கடையின் சுவரை கஸ்டப்பட்டு சுத்தம் செய்து அழகாக தெரிய வேண்டுமென்பதற்காக பணம் செலவழித்து வண்ணம் பூசி வைத்திருந்தார்கள்.

தேர்தல் நேரமாயிற்றே? அவர்கள் பட்ட கஷ்டம், நகரின் அழகு பற்றிய அறிவு ,அக்கறை என்ற கற்பூர வாசனைகள் தெரியாத கழுதையொன்றின் கண்ணில் அந்த மதில் பட்டுவிட்டது. தனது தலைவனான மற்றொரு கழுதையொன்றின் சுவரொட்டியை கொண்டுவந்து ஓட்டி அவர்கள் பட்ட கஷ்டம் எல்லாவற்றையும் நொடியில் நாசம் செய்து விட்டது.

இனி கண்டகண்ட கழிசடைகளின் மூஞ்சி களெல்லாம் இனி இவ்வாறு சுவர்களை அசிங்கப்படுத்துவத்தைக் காணலாம். யாழ்ப்பாண நகரை அழகாக்க வரையப்பட்டுள்ள ஓவியங்கள் மேலும் கூட ஒட்டப்படலாம்.

அடுத்தவன் அழகாக வைத்திருக்க ஆசைப்படும் இவ்வாறான மதில்கள், சுவர்களில் பணம் சம்பாதித்து சுகபோகவாழ்க்கை வாழ தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகளின் சுவரொட்டிகளை ஓட்டுவது அருவருக்கத்தக்க செயல்.

தமிழ் பிரதிநிகளாக பறைசாற்றுவோரே குப்பையர்களாக இருந்தால் சிங்களக்கட்சிகள் என்ன வேலைகள் செய்வார்கள்?

தங்கள் கட்சி சார்ந்தோரின் மதில்கள்,சுவர்களில் மட்டும் தம் விளம்பரங்களை ஓட்டலாம் தானே? இல்லையேல் யாரையும் பாதிக்காமல் துண்டுப்பிரசுரமாக கொடுக்கலாம் தானே? ?

Image may contain: 1 person, outdoor

A-Nagesh UruthiraMoorthy ஏற்கனவே ஒட்டியதை துப்புரவு செய்து இருந்தால் புதிய கழுதை ஒட்டாமல் இருந்து இருக்குமோ.
  • Abi Sheg அது ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர். அந்தக் கடைக்காரர் கிழித்தெறிந்து விட்டார். அதற்கு பின்பும் இப்படி. இவர்களே இப்படியென்றால் விளம்பரப் பிரியர்களான ராஜபக்சேக்கள், விஜயகலா, அங்கஜன் ,டக்ளஸ் கும்பல்கள் இதைப்பார்த்து விட்டு என்ன செய்வார்கள் ?

    அண்மையில் பொங்கலுக்கு தான் அந்தக்கடைக்கு வண்ணம் அடித்து சுத்தம் செய்தார்கள். சுவரொட்டிகள் ஒட்டாமல் துண்டுப்பிரசுரமாகக் கொடுத்தால் சுற்றுப்புறமும் அழகாக இருக்கும் என்று இந்த கழுதைகளுக்கு புரிவதில்லையே சார் 🙁

 

  • Write a reply…
     
  • Kamal Rajah Ella kallarum arasiyalil kuthichu thappurathukku mudivu panniddanga.