புதினங்களின் சங்கமம்

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கருகில் கைக்குண்டு மீட்பு!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு அண்மையாகவுள்ள வீதியோரத்தில் நேற்றிரவு(28) கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது இவ்வாலய மஹோற்சவப் பெருவிழா இடம்பெற்று வரும் நிலையிலேயே குறித்த கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மேற்படி பகுதியிலுள்ள வீதியோரத்தில் கைக்குண்டு காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் இதுதொடர்பாக காங்கேசன்துறைப் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

இதனையடுத்து சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.