கொரோனா கொடூரத்திலும் அடங்காத கிளிநொச்சி ரவுடிகள்!! வாள் வெட்டில் 7 பேர் காயம்!!
கொரோனா கொடூரத்திலும் அடங்காத கிளிநொச்சி ரவுடிகள்!! வாள் வெட்டில் 7 பேர் காயம்!!
கிளிநொச்சி மாவட்டம் உருத்திரபுரம் சூழாவடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஏழு பேர் காயம் அடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத மணல் ஏற்றும் விவகாரமே வாள்வெட்டில் முடிந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இரண்டு தரப்புக்களுக்கு இடையிலான குழு முரண்பாடு இறுதியில் வாள்வெட்டில் முடிந்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏழுபேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்களில் இருவர் படுகாயம் அடைந்ததாகவும் அவர்கள் இருவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் ஏனைய ஐவரும் சிறிய காயங்களுக்கான சிகிச்சை முடித்து வீடு திரும்பியிருப்பதாகவும் அங்கிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

