புதினங்களின் சங்கமம்

வெள்ளைக்கார சிவனடியார் யாழில் கட்டிய சிவன் கோவில்.50 வருடங்களின் பின்னர் இன்று ? (வீடியோ)

அமெரிக்க ஹவாய் சைவ ஆதீன ஸ்தாபகர் குருதேவர் சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள் தனது குரு சிவயோக சுவாமிகள் ஆசியுடன் 1949 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில் ஸ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரமத்தை நிறுவினார். ஆச்சிரமத்தில் 1972 ஆம் ஆண்டு சிறு கோவிலாக அமைக்கப்பட்ட பசுபதீஸ்வரர் ஆலயம் 50 வருடங்களின் பின்னர், அக் கோயில் வளாகத்திலேயே புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.