புதினங்களின் சங்கமம்

யாழ் கொக்குவிலில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றத்தில் நபர் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குவில் குளப்பிட்டி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நீண்டகாலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார் எனவும் , குறித்த நபர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நபரை கைது செய்ததாகவும் , கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து ஒரு தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.