தமிழருக்கு ஒரு நியாயம் சிங்களவருக்கு இன்னொரு நியாயம் இதுதான் இலங்கை அரசின் நியாயம்?

தமிழருக்கு ஒரு நியாயம்
சிங்களவருக்கு இன்னொரு நியாயம்
இதுதான் இலங்கை அரசின் நியாயம்?

முதலாவது படத்தில் இருப்பவர் தமிழ் அரசியல் கைதி செல்லப்பிள்ளை மகேந்திரன். 27 வருடமாக சிறையில் வைக்கப்பட்டிருந்தவர். கடந்த வாரம் சிறையிலேயே மரணம் அடைந்து விட்டார்.

இரண்டாவது படத்தில் இருப்பவர் சிங்கள கைதி சுனில் ரத்னாயக்கா. எட்டு அப்பாவி தமிழ் மக்களை கொன்ற குற்றத்திற்காக நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்.

கடந்த நான்கு வருடமாக சிறையில் இருந்த இந்த முன்னாள் ராணுவ வீரரை ஜனாதிபதி கோத்தா பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்துள்ளார்.

அதுமட்டுமன்றி கைது செய்து வைக்கப்பட்டிருந்த பல ராணுவ புலனாய்வாளர்களையும் ஜனாதிபதி கோத்தா விடுதலை செய்துள்ளார் என்று அறிய வருகிறது.

இப்போது எமது கேள்வி என்னவெனில் சிங்கள கைதிகளை விடுதலை செய்த ஜனாதிபதி கோத்தா ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை என்பதே.

இதுபற்றி தமிழ் ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டபோது தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் படிப்படியாக அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறுகிறார்.

ஆச்சரியம் என்னவெனில் சிங்கள கைதிகளின் விபரங்கள் உடன் கிடைத்து விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால் தமிழ் கைதிகளின் விபரங்கள் கிடைக்க ஏனோ தாமதம் ஆகின்றது

அதுவும் வெறும் 77 தமிழ் கைதிகளின் விபரங்களை பெறுவதற்கு ஏன் இந்த தாமதம்?

கடந்த நல்லாட்சி அரசிலும் விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் படிப்படியாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படும் என்று கூறினார்கள். ஆனால் கடைசிவரை விடுதலை செய்யவில்லை.

இப்போது இந்த ஆட்சியிலும் விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் படிப்படியாக விடுதலை செய்யப்படும் என்று கூறுகிறார்கள். இவர்களும் விடுதலை செய்யப்போவதில்லை என்பதையே இது காட்டுகிறது.

error

Enjoy this blog? Please spread the word :)