புதினங்களின் சங்கமம்

யாழில் விபரீத முடிவால் 24 வயது கிருபாகரன் பரிதாப மரணம்..!

யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச செயலகத்திற்கு உட்பட சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் தவறான முடிவெடுத்து இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் அறையினுள் அவர் இவ்வாறு தூ.க்கிட்டு உயிர்மாய்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவதில் இரவீந்திரராசா கிருபாகரன் வயது 24 என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்.

இளைஞனின் இந்த திடீர் முடிவுடன் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவிடத்திற்கு சென்ற மரண விசாரணை அதிகாரி விசாரணைகைளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை யாழ் வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.