புதினங்களின் சங்கமம்

பளையி்ல் நேற்று காணாமல் போன குடும்பஸ்தர் தோட்ட காணியில் சடலமாக மீட்பு..!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய பளை பகுதியில் சடலம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

பளை பெரியபளையில் வசித்து வந்த கணபதிபிள்ளை முருகேசம்பிள்ளை என்பவர்( 01)நேற்றைய தினம் காணாமல் போயுள்ள நிலையில் இன்று (02) அருகில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் சடலமாக இனங்காணப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.