கிளிநொச்சி விபத்தில் 20 வயது இளைஞன் பலி!!
கிளிநொச்சி – இராமநாதபுரம் வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு்குள்ளாகியுள்ளது.இதன்போது பலத்த காயமடைந்த 20 வயதான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.