புதினங்களின் சங்கமம்

3 மாகாணங்களை தவிர ஏனைய பகுதிகளில் மின்சாரம் வழமைக்கு

நாடளாவிய ரீதியில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் சில பகுதிகளில் வழமைக்கு திரும்பி முன்னதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களை தவிர ஏனைய மாகாணங்களில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் வழமைக்குத் திரும்பியுள்ளது தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின்சாரம் துண்டிப்பு தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு மின்வலு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு வார காலத்தில் விசாரணை தொடர்பில் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்குமாறும் மின்வலு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மின்வலு அமைச்சின் செயலாளருக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.