புதினங்களின் சங்கமம்

புதுக்குடியிருப்பு நகரில் ஓர் அசிங்கமான இடம் கண்டுகொள்ளாத (PHI) சுகாதார பரிசோதகர்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகப் பிரபல்யமான இடமாக புதுக்குடியிருப்பு நகரம் காணப்படுகின்றது.
புதுக்குடியிருப்பு நகரில் ஏனைய பிரச்சினைகள் இருந்தாலும் மிக முக்கியமான பிரச்சினை புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள பிரபல்யமான உணவகத்திற்குப் பின்புறமாகவும் இரணைப்பாலை வீதியில் அமைந்துள்ள புகைப்படக் கலையகம் ஒன்றின் பின்புறமாகவும் காணப்படும் காணியில் கழிவுநீர் நீங்கி நின்று துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன் சுவாச நோய்களை ஏற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
காரணம் குறிப்பிட்ட உணவகத்திற்கு பின்புறமாக காணப்படும் மலசலகூடக்கழிவு மழைகாலங்களில் அருகிலுள்ள காணியானது பள்ளக்காணி என்பதனால் அந்தக் கழிவுகள் அனைத்தும் குறித்த பள்ளத்திற்குள் தேங்கி நிற்கின்றது.
இதனால் மழை காலங்களில் துர்நாற்றம் வீசுவதோடு இரணைப்பாலை வீதியில் உள்ள புகைப்படக் கலையகம் மற்றும் அருகிலுள்ள கடைகளுக்கு செல்ல இயலாத அளவிற்கு துர்நாற்றம் வீசுவதை எவரும் மறுக்க முடியாது.
குறிப்பிட்ட கடைகளுக்கு அருகாமையில் பிரபல்யமான பாடசாலை ( சிறி சுப்பிரமணிய வித்தியாசாலை ) அமைந்துள்ளது. பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு வருகின்ற பெற்றோர்கள் தொடர்ந்தும் அசௌகரியங்ஙளை எதிர் கொண்டு வருகின்றனர்.
கழிவுநீர் நீங்கி நிற்கின்ற காணியானது புதுக்குடியிருப்பைச் சேர்ந்த முன்னாள் கிராம சேவையாளர் ஒருவருக்குச் சொந்தமான காணியாகும்.
மலசலகூடக்கழிவுநீர் மற்றும் மழைகாலங்களில் தேங்கி நிற்கின்ற கழிவு நீரினால் மக்கள் படும் அவஸ்தையோ சொல்லில் அடங்காதவை.
இவ்விடயம் தொடர்பில் கடை உரிமையாளர்கள் சிலர் உரிய தரப்பினரிடம் தெரியப்படுத்தியும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்பது. ஒரு துயரமான சம்பவம்.
மழை காலங்களில் கழிவு நீர் தேங்கி நிற்கின்ற பள்ளக்காணியானது சதுப்பு நிலம் போன்று காட்சியளிப்பதுடன் கோடை காலத்தில் காய்ந்து வரண்டு போய்க் கிடப்பதையும் எவரும் எளிதில் மறுத்து விட முடியாது.
இதில் எழுகின்ற கேள்வி என்னவெனில் புதுக்குடியிருப்பு சுகாதாரபரிசோதகர்களுக்கு குறித்த சம்பவம் தெரியாமல் இல்லை. என்ன காரணத்திற்காக கண்டும் காணாததும் போல் இருக்கின்றார்கள் என்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.
புதுக்குடியிருப்பு நகர் மத்தியில் கழிவுநீர் தேங்கி நிற்பதானது ஒருவர் இருவருக்கு மட்டுமல்ல பலருக்கு நோய்த் தொற்றுக்களை ஏற்படுத்தக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் நாளொன்றுக்கு நூற்றூக்கணக்கான மக்கள் சென்று வருகின்றார்கள்.
எனவே மக்களுக்கு அசௌகரிங்களை ஏற்படுத்துகின்ற விடயங்களில் புதுக்குடியிருப்பு சுகாதாரத்துறையினர் கவனம் செலுத்தாமல் இருப்பதற்கான காரணம் புரியாத புதிராகவே இருக்கிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டிய துறைசார்ந்த திணைக்களம் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறினால் மக்கள் யாரிடம் முறையிடுவது?
ஆகவே புதுக்குடியிருப்பு நகரில் இருக்கின்ற பிரபல்யமான உணவகத்திற்குப் பின்னால் அசிங்கமானதும் மக்களுக்கு துர்நாற்றத்தின் மூலம் நோய் உபாதைகளை விளைவிக்கக்கூடிய இடம் இருக்கலாமா?
இதற்கு புதுக்குடியிருப்பு பொதுச் சுகாதார வைத்திய அதிகாரியினால் அனுமதி வழங்க முடயுமா?
என்பதுதான் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகம்.
ஆகவே உரிய காணிக்கு உரித்துடையவரோ அல்லது குறித்த உணவகத்தின் உரிமையாளரோ கவனம் செலுத்துகின்றாரோ இல்லாயோ ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய புதுக்குடியிருப்பு சுகாதார பரிசோதகரும் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரியும் உரிய நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இன்று இந்தக் கழிவுநீர் நீங்கி நிற்கின்ற இடம் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
ஆகவே இது யாருடைய தவறு?
எனவே புதுக்குடியிருப்பு நகரில் காணப்படுகின்ற கழிவு நீர் தேங்கி நிற்கின்ற பள்ளக்காணியானது மலசலகூடத்தின் அருகில் இருப்பதோடு வெயில் காலத்தில் ஓரளவு காய்ந்த நிலையில் காணப்படுவதை அவதானிக்க முடியும்.
எனவே துறைசார்ந்த அதிகாரிகள் களவிஜயமொன்றை மேற்கொண்டு மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்ற நிலைமையை மாற்றியமைத்து எமது மக்கள் சுகதேகிகளாக வாழ்வதற்கான எதிர்காலத்தை சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகள் உருவாக்குவார்களா?
தொடர்ந்தும் அவதானிப்புடன்.
*அஞ்சான்*
May be an image of outdoors and treeMay be an image of tree and outdoors