முஸ்லீம்கள் கருத்தடை மாத்திரை கலந்தால் நீங்கள் பயப்படாதீர்கள்!! ஆனால் ….. இதோ வைத்தியரின் விளக்கம்!!
இந்த பதிவிற்கு உணர்ச்சி பொங்க காமண்ட் செய்ய நினைப்பவர்கள் தெளிந்த மனதுடன் பதிவை இறுதிவரை வாசிக்கவும்…இது கல்யாணமானவர்களுக்கு பயன்படக்கூடிய ஒரு மருத்துவ பதிவும் கூட
ஒரு குழந்தை எவ்வாறு பிறக்கின்றது?இது நாம் பருவமடைந்து அரும்பு மீசை முளைக்க ஆரம்பிக்கும் காலத்தில் எழும் வினா..யாரிடமும் கேட்க முடியாது..கேட்டால் அடி உதை தான்..நல்லகாலம் இலங்கை அரசு சுகாதாரம் எனும் பாடம் மூலம் இனப்பெருக்க விடயங்களை சற்று யாடை மாடையாக கூறிவிட்டது..அதாவது பெண்ணின் முட்டையும் ஆணின் விந்தும் இணையும் போது குழந்தை பிறக்கும் எனும் அரிய இரகசியம் அப்பொழுது தான் எமக்கு எல்லாம் தெரிய வருகின்றது…அப்படியே அதற்கான செயற்பாடுகளும் எமக்கு தெரிய வருகின்றது..நாமும் மகிழ்வடைந்து நண்பர்கலுடன் A joke எனும் உலகில் தடம் பதிக்கின்றோம்..எத்தனை ஜோக்குகளை தான் இயற்றித்தள்ளி இருப்போம்…
சரி குழந்தை பிறக்கும் விடயம் சரி குழந்தை பிறப்பதை தடுப்பது அதாவது கருத்தடை செய்வது எப்படி?
சிம்பிள்..இந்த முட்டையும் விந்தும் சேராமல் இருந்தாலே போதுமானது…
கணவன் ஒரு அறையிலும் மனைவி இன்னொரு அறையிலும் தூங்குவது பணச்செலவற்ற ஒரு கருத்தடை முறை…ஏழைத்தாயின் மகன் நானும் அதையே பின்பற்றலாம் என உள்ளேன்
ஆண்களின் விந்து உற்பத்தியை குறைக்கும் அல்லது வீரியமில்லாமல் செய்யும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பவில்லை…காண்டம் எனும் தடுப்பு முறை (barrier method) மட்டுமே உள்ளது
பெண்களுக்கு பரியர் மெதோட் உடன் முட்டை விடுவிக்கப்படும் சூழ்கொள்ளலை நிறுத்தும் மருந்துகள் உள்ளன..
பொதுவாக பெண் ஹார்மோன்கள் உடலில் ஒரு சீரான செறிவில் இருப்பது இல்லை..ஒரு மணி வடிவை ஒத்ததாக -bell shape ஒவ்வொருநாளாக செறிவு அதிகரித்து உச்சப்புள்ளியை அடைந்து பின்னர் படிப்படியாக குறைந்து பேஸ் லைனுக்கு வரும்..இதை pulsatile release என கூறுவோம்…இதனாலேயே சூழ்கொள்ளல் நாடைபெறுகிறது
மாறாக அந்த பெண் ஹார்மோன்களை உடலில் எப்பொழுதும் குறித்தளவு மாறாச்செறிவுடன் பேணும் போது அது எதிர்பின்னூட்டல் விளைவு மூலம் அதாவது negative feed back activity மூலம் சூழ்கொள்ளலை நிறுத்தி முட்டை விடுவிப்பை தடுக்கும்..இங்கு குருதியில் மாறாச்செறிவுடன் அந்த ஹார்மோன்களை பேணுவது மிகவும் கடினம்…காரணம் எமது உடல் pulsatile முறையிலேயே ஹார்மோனை சுரக்கும்..
என்வே ஹார்மோன்ககளை கொண்ட கருத்தடை மாத்திரைகளை தினந்தோறும் உட்கொண்டு அந்த மாறாச்செறிவை பேணினால் குழந்தைப்பேறை பின்போடலாம்..
இலங்கயில் மித்திரி எனும் ஒரு ஓரல் கன்ராசெப்டிவ் மாத்திரை உள்ளது…அதில் 21 ஹார்மோன் அடங்கிய வெள்ளை குளிசைகளும் 7 இரும்புச்சத்து அடங்கிய சிவப்பு குழிசைகளும் இருக்கும்.
அந்த 21 குளிசைகளும் 3 வரிசைகளில் -3 lines ,7மாத்திரைகளை கொண்டதாக இருக்கும்..
1st line- 7 pills
2nd line 7 pills
3rd line 7 pills
4ஆவது வரிசையில் அந்த 7 இரும்புச்சத்து நிறம்பிய குழிசைகள் இருக்கும்
மாதவிடாய் ஆரம்பித்த அன்றே இந்த குழிசைகளை போட ஆரம்பிக்க வேண்டும்…அதுகும் குறிப்பிட்ட நேரத்தில் போட வேண்டும்..6pm எனில் ஒவ்வொரு நாளும் 6pm தான் அந்த மருந்தை போடவேண்டும்…
ஒவ்வொருநாளும் அந்த அட்டையில் காட்டபட்ட ஒழுங்கில் போட்டு முடிக்கவேண்டும்
சரி நீங்கள் மாதவிடாய் ஆரம்பித்து 2ஆம் நாள் மாத்திரை போட ஆரம்பித்தால் அல்லது ஒரு மாத்திரையை போட மறந்தால்(<24hr) பிரச்சனை இல்லை..அடுத்த நாள் உங்களுக்கு முதல் நாள் போடவில்லை எனும் நினைவு வந்ததும் தவற விட்ட அந்த மாத்திரையை உடனே போடுங்கள்..அத்துடன் அன்று வழக்கமாக 6மணிக்கு எடுக்கும் மருந்தையிம் போடுங்கள்…மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவையில்லை..
நீங்கள் முதல் இரண்டு line இல் உள்ள மாத்திரைகளை பாவிக்கும் தருணத்தில் 2 அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மாத்திரைகளை தவறவிட்டால் நினைவு வரும் பொழுது இறுதியாக போடவேண்டிய மாத்திரையை உடனடியாக போடுங்கள்..அத்துடன் வழக்கமாக போடும்(6மணி குளிசை) மாத்திரையை அந்த நேரத்தில் போடுங்கள்,,ஒருபோதும் ஒரு நாளில் 2க்கு மேற்பட்ட மாத்திரைகளை மிஸ்பண்ணிவிட்டோம் என்று 2 க்கு மேற்பட்ட மாத்திரைகளை 24hr இல் குடிக்க வேண்டாம்..2 க்கு மேற்பட்ட மாத்திரைகளை நீங்கள் போடத்தவறியதால் இனிவரும் 7 நாற்களுக்கு காண்டம் பாவித்தே (at the same time மித்திரி மாத்திரைகளயும் பாவித்தவாறே) உடலுறவு கொள்ளவேண்டும்..அல்லது emergency contraceptive pill எனப்படும் மாத்திரை காண்டத்துக்கு பதிலாக பயன்படுத்த வேண்டும்..மிகுதி வெள்ளை ஹார்மோன் மாத்திரைகளையும் சிவப்பு இரும்புச்சத்து அடங்கிய மாத்திரைகளையும் வழமை போல card முடியும் வரை பாவிக்கலாம்.
ஆனால் நீங்கள் மூன்றாவது line இல் உள்ள வெள்ளை மாத்திரைகளை பாவிக்கும் தருணத்தில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட மாத்திரைகளை தவற விட்டால் மேற்கூறிவது போல மருந்தை எடுத்து அடுத்து 7 நாற்களுக்கு காண்டம் உபயோகிக்க வேண்டும்.ஆனால் இந்த தடவை வெள்ளை மாத்திரைகள் முடிந்த உடன் சிவப்பு இரும்புச்சத்து மாத்திரைகள் உபயோகப்படுத்தாமல் அவற்ரை discard செய்துவிட்டு உடனடியாக இன்னொரு மித்திரி card வாங்கி வெள்ளை குழிசைகளை பாவிக்க தொடங்குங்கள்…காரணம் கருத்தரிக்காமல் விடுவதில் இந்த மாத்திரைகளை ஒழுங்கான complience இல் போடுவது மிக முக்கியம்…அப்பொழுதான் ஹார்மோன் செறிவுமட்டம் சரியாக பேனப்படும்
அது போல திடீர் என உணர்ச்சிவசப்பட்டு பெண்நண்பியுடன் மேட்டர் முடியும் தருணத்தில் emergency contraceptive pill எனும் ஒன்றை உடலுரவு நடந்து 72 மணித்தியாலத்தில் ஒன்றும் ..அதிலிருந்து 12 மணித்தியாலத்தில் இன்னொன்றும் எடுக்கவேண்டும்..இதை அடிக்கடி பயன்படுத்துவது பெரும்பாலும் உசிதம் இல்லை.
கரு தங்கிவிட்டால் PgE1 எனும் மருந்தை சட்டவிரோதமாக பாவிப்பர்..அதுகும் vaginal rout இல்..அப்போ இதை சாப்பாட்டோட்ட கலந்தால்?அட நம்ம அல்சர் பிரச்சனை தீரும்…
சரி விடயம் என்ன என்றால்..கருத்தரிக்கமல் விடுவது எவ்வளவு கஸ்டம் என விளங்கிவிட்டது தானே..ஒரு சாப்பட்டில் இந்த மித்திரியை கலந்து கொடுத்தல் எப்படி கருத்தரிக்காமல் விடலாம்?
அந்த பாய் கடை கொத்துரொட்டியை தினமும் 6 மணிக்கு நாம் சாப்பிடுகின்றோமா?
ஒருநாள் சாப்பிட மறந்தால் பதறியபடி அடுத்த நாள் 2 கொத்து சாப்பிடுகின்றோமா?
அந்த மருத்துகள் எல்லாம் ஒரு குறித்த வெப்பநிலையில் அதாவது அறை வெப்பநிலையில் பேணப்படுபவை..அவற்றை சூடாக்கும் பொழுது டீனர்ச்சர் அடைந்து செயற்பாடே இல்லாமல் போகும்..
ஆக முஸ்லிம்கடையில் உணவில் கருவளத்தை இல்லாமல் செய்ய மருந்து கலப்பது அனேகமாக ஒரு போலிச்செய்தி..அப்படி கலந்தாலும் அதை வாங்கி சாப்பிடுவதால் குழந்தை பிறப்பை தடுக்க முடியாது….. பயப்படாமல் சாப்பிடுங்கள்..உங்கள் தாயாகும் /தகப்பனாகும் கனவு ஒருபோதும் அழிந்துவிடாது..அந்த town hall இல் உள்ள ரிக்கோன் எனும் கடையில் போடும் கொத்துரொட்டிக்கு இலங்கையில் எந்த கொத்தும் நிகர் இல்லை,,,நானும் Jeyaraja Vijayaratnamஉம் ரிக்கோன் கொத்துக்கும் அந்த டால்பினுக்கும் வாழ்நாள் அடிமைகள்….இனியும் சாப்பிடுவோம்…
ஆனால் இங்கு உள்ள அபாயம் என்ன எனில் அப்படி மருந்து கலப்பது உண்மை என வைத்துகொள்வோம்..அதை கலப்பவனுக்கு இந்த மருத்துவ அறிவியல் தெரியாது..குழந்தை பிறப்பை தடுக்கலாம் என எண்ணி கலக்கின்றான்..நமக்கோ அதனால் பிரச்சனை இல்லை..குழந்தை பிறந்தே ஆகும்..ஆனால் இன்னொரு நாள் அவன் இன்னொரு slow-poison போன்ற உடலின் வேறுபகுதிகளை மெதுவாக நின்றுதாக்கும் மருந்து ஒன்றை உணவுடன் கலக்கமாட்டான் என ஒருவித நிற்சயமும் இல்லை…கலப்பது என வந்துவிட்டால் மித்திரி என்ன slow poison என்ன….ஆக அவ்வாறு செய்யமாட்டார்கள் எனும் நம்பிக்கையுடன் இருப்போம்…
உங்கள் Dr.Grey